சாதிவாரியா நடத்தினா அவங்க எண்ணிக்கை தெரிஞ்சிடுமே!! பரபரப்பை கிளப்பிய சீமான்!!
Seeman criticized DMK MKStalin
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்திகளை சந்தித்தபோது திமுக நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கியது குறித்தும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வலியுறுத்தியுள்ளது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்க உள்ளனர். அரசியல் கட்சிகளும் தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளை பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இப்போது கையெழுத்து இயக்கம் நடத்துபவர்கள் இரண்டரை வருடங்களாக என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?
காங்கிரஸ்தான் நீட் தேர்வை கொண்டு வந்தது. நீங்கள் தான் கூட இருந்து ஆதரவு தெரிவித்தீர்கள். இப்ப திடீர்னு நீட் தேர்வு மீது வெறுப்பு வந்துள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வு கையெழுத்து இயக்கத்தை நடத்த வேண்டியது தானே? தேர்தல் வந்தால் மட்டுமே எங்கள் மக்கள் மீது அன்பு, அக்கரை, பாசமெல்லாம் வருமா?
உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதிட்டு வெற்றி பெற்றது யார்? அவர் எந்த கட்சியை சார்ந்தவர்? கார்த்திக் சிதம்பரம் நீட் தேர்வு வேண்டும் என பேசி உள்ளார். காங்கிரஸ் முழுமையாக நீட் தேர்வை எதிர்கிறதா? நீட் தேர்வை ஆதரித்தாலும், காவிரியில் தண்ணீர் தரவில்லை என்றாலும், கச்சத்தீவை மீட்க முடியாது கொடுத்தது கொடுத்தது தான் என்று கூறினாலும் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக் கொள்வீர்களா?
அனைவரிடமும் கையெழுத்து வாங்கி அனுப்பி வைத்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? யார் நீட் தேர்வை நீக்குவார்கள்? தற்போது தேர்தல் வரப்போகிறது அடுத்து வரும் அதிகாரம் தான் அதை முடிவு செய்யப் போகிறது. இது ஒரு நாடகம் என்று உங்களுக்கே தெரியவில்லையா!?
திடீரென சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இப்போதுதான் அவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளார்களா? அதிகாரத்தில் இருக்கும் இவர்களால் குடிவாரிய கணக்கெடுப்பு நடத்த முடியாதா? ஏன் பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும். நிதீஷ் குமார் பிரதமருக்கு கடிதம் எழுதி தான் குடிவாரி கணக்கெடுப்பு எடுத்தாரா?
இவர்கள் குடிவாரி கணக்கெடுப்பை எடுக்கமாட்டார்கள். ஏனென்றால் இவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என தெரிந்துவிடும். திமுக குடிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தமிழர், தமிழர் அல்லாதோர் எண்ணிக்கை தெரிந்து விடும் என்பதாலேயே கணக்கெடுப்பு எடுக்காமல் உள்ளனர்" என சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Seeman criticized DMK MKStalin