பாராளுமன்ற தேர்தல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சீமான்! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திருமணம் நடந்ததில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசுகையில் தெரிவித்திருப்பதாவது, ''அரசியல் என்பது வாழ்வியல். அது இல்லாமல் எதுவும் இல்லை. இந்த திருமணத்தில் மணமகன் ஒரு இந்து பெண்ணை திருமணம் செய்துள்ளார். 

மணப்பெண்ணின் பெயர், மதம், வழிபாடு என அனைத்தும் நேற்று வரை வேறு தான் இன்றைக்கு அவர் பெரும்பான்மையிலிருந்து சிறுபான்மை என தெரிவித்தால் உங்களுக்கு கோபம் வருதா இல்லையா? எனக்கு கோபம் வருமா இல்லையா? 

இதனால்தான் சிறுபான்மை என பேசினாள் செருப்பால் அடிப்பேன் என தெரிவித்தேன். மதம் என்பது மாறக்கூடியது. பெண்ணை தமிழச்சி என்பதை மாற்ற முடியுமா அவர்களை அவரின் மொழி, இனம், தமிழர் என்பதை மாற்ற முடியுமா?

நான் பேசுவதில் பெரியார் சொன்னது போல், நன்மை இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் தீமை இருந்தால் விட்டு விடுங்கள். அரசியல் சாசனத்தில் சிறுபான்மையினருக்கு சலுகை மட்டும் தான் கொடுக்கப்பட்டுள்ளது. 

விடுதலை பெற்ற இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என எத்தனை பேர் பிரதமராக இருந்துள்ளார்கள். ஒன்றுமில்லாத ரப்பர் ஸ்டாம்ப் பதவியை அப்துல் கலாமிற்கு வழங்கினார்கள். 

தமிழகத்தில் பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் எனக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். ஏனென்றால் அவரை எதிர்த்து நான் போட்டு விடுவேன்'' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman says modi contest against parliamentary elections


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->