பணத்திற்காக கொள்கையை விற்பதா!...அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி காட்டம்! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பெருமூச்சி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது,  பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம், சமையல் கூடத்தையும் பார்வையிட்டார். மேலும், மாணவர்களை புத்தகம் வாசிப்பு மற்றும் எழுதுதல் திறன்களை கண்டு பெருமை அடைந்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து வருகிறோம் என்றும், பெருமூச்சி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஆய்வு மேற்கொண்டபோது மாணவர்கள் திறமையுடன் பதில்  அளித்ததாகவும், இதனை கண்டு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்த அவர், மாணவர்களின் கல்வி தரம் உயர்ந்துள்ளதாக கூறினார்.

மேலும், சட்டசபை வரலாற்றிலேயே  கல்வித்துறைக்கு அதிக நிதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒதுக்கியுள்ளதாகவும், வரும் 2026-ம் ஆண்டுக்குள் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் சரி செய்யப்படும் என்று கூறினார்.

பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், கொள்கையை விட்டுக் கொடுத்து மத்திய அரசிடம் பணம் பெற அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selling policy for money minister anbil mahesh is lying


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->