இதுதான் அனைத்து மாநிலங்களுக்கான ஃபார்முலா வா..? திராவிட மாடல் அரசை ரவுண்டு கட்டிய செல்லூர் ராஜூ..!! - Seithipunal
Seithipunal


மதுரையில் நடைபெற்ற கள்ளழகர் திருவிழாவின் பொழுது வைகை நதியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் செல்லூர் ராஜு பேசியதாவது "இதுவரை நடைபெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் உயிரிழப்பு என்பது நடந்ததே கிடையாது. ஆனால் கடந்த 2 வருடங்களாக உயிரிழப்பு நிகழ்ந்து வருகிறது.

தமிழக அரசு பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் வி.ஐ.பிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் பொழுது போதுமான அளவு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படாததால் அதிகப்படியான குற்ற செயல்கள் அரங்கேறியுள்ளன. காவல்துறையினரின் குடும்பத்தினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் அரங்கேறியுள்ளது. 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இளம் வயதினர் குற்றச் செயல்களில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கான பாதுகாப்பு பணியில் கவனம் செலுத்தியதால் கள்ளழகர் விழாவில் குற்ற செயல்கள் அதிகரித்து காணப்பட்டது.

இதுதான் அனைத்து மாநிலங்களுக்கான ஃபார்முலா. இது போன்ற சட்ட ஒழுங்கு சீர்கெட்டு, விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏழை மக்களை கண்டு கொள்ளாதது தான் திராவிட மாடல் அரசு. பாமர மக்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை கொடுப்பதுதான் திராவிட மாடல் அரசு. முதலில் நிர்வாகத்தை செம்மைப்படுத்த சொல்லுங்கள். திருக்கல்யாணத்தை காண உண்மையான பக்தர்கள் யாரும் செல்லவில்லை. விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவர்கள் மட்டுமே திருக்கல்யாணத்தை காண திராவிட மாடல் அரசு அனுமதித்துள்ளது." என தமிழக அரசை முன்னாள் அமைச்சர் செல்வராஜூ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sellur Raju criticized Dravidian model govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->