கலைஞர் குடும்பத்தில் இனி வாரிசு பிறக்க கூடாது..!! அது திமுக தொண்டர்கள் எண்ணத்தின் வெளிப்பாடு..!! - Seithipunal
Seithipunal


மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் "தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கூட்டுறவு துறையில் பல்வேறு குளறுபடிகளால் பொருட்கள் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் தரமான பொருட்களை முறையாக வினியோகம் செய்தோம். ஆனால் திமுக ஆட்சியில் மூத்த குடிமக்களுக்கு பொருட்கள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது" என குற்றம் சாட்டினார். அப்பொழுது அமைச்சர் கே.என் நேரு வாரிசு அரசியல் குறித்து பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "மூத்த அமைச்சர் கே.என் நேரு சொன்னது ஒரு வகையில் உண்மைதான். 

கலைஞர் கருணாநிதி குடும்பத்திலிருந்து யார் வந்தாலும் ஆட்சி கட்டிலுக்கு வந்து விடுவார்கள். தமிழகத்திலிருந்து மன்னர் பரம்பரையை தான் ஒழித்து உள்ளோம் கலைஞர் பரம்பரையை ஒழிக்க முடியவில்லை.

இனி கலைஞர் கருணாநிதி குடும்பத்திலிருந்து வாரிசுகள் வரக்கூடாது என்று அக்கட்சியின் தொண்டர்களே நினைப்பார்கள்.

அதன் வெளிப்பாடாகத்தான் அமைச்சர் கே.என் நேரு பேசியுள்ளார். அவர் எப்பொழுதும் உண்மையை சொல்லும் நபர். இன்பநிதிக்கு குழந்தை பிறந்தாலும் திமுக தொண்டர்களை கொடி பிடிக்க சொல்வார்கள். அதனால் இனி தலைவர் குடும்பத்திலிருந்து வாரிசு வேண்டாம் என தொண்டர்கள் நினைப்பதை அமைச்சர் மறைமுகமாக வெளிப்படுத்தி உள்ளார்" என கிண்டலாக பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sellur Raju said Dmk volunteers think no heir should be born in stalin family


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->