பொன்னியின் செல்வன் விடுங்க.. பி.டி.ஆர் ஆடியோ தான் ஹைலைட்.. முன்னாள் அமைச்சர் கிண்டல்..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் பேரவை சார்பில் நேற்று பெத்தானியபுரம் பகுதியில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய அவர் "நடிகர் ரஜினிகாந்த் படம் போல மீசை வச்ச ரஜினி, மீசை இல்லாத ரஜினி என்பது போல் திமுக செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு என மாறிவிடுவார்கள்.

முதலமைச்சருக்கு உழைப்பவர்களின் கஷ்டம் தெரியுமா? நோகாம முதலமைச்சர் பதவி வாங்கி விட்டார். அவருக்கு எப்படி தொழிலாளர்களின் வலி தெரியும். சட்ட மசோதா இயற்றிவிட்டு போராட்டம் அறிவித்த பிறகு எதிர்ப்பு தெரிவித்த பிறகு வாபஸ் வாங்கியுள்ளார். சட்ட மசோதாவை நிறுத்தி வைக்கிறேன் என்று சொல்லிய முதல்வர் வாபஸ் பெற்று விட்டதாக கூறி சிவப்புச்சட்டை அணிந்து மே தினம் கூட்டத்திற்கு வந்திருக்கிறார்.

தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யாமல் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுடன் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எல்லாம் பணத்திற்காக தான். கடந்த முறை 25 கோடி ரூபாய் பெற்றவர்கள் அடுத்த முறை 50 கோடி ரூபாய் எதிர்பார்த்து தான் திமுகவுடன் இருக்கிறார்கள். 

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை விட நிதியமைச்சரின் ஆடியோ தான் இப்பொழுது ஹைலைட். மதுரைக்காரன் வீரமானவன் தான் அமைச்சர் தியாகராஜனை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஸ்டாலினின் அப்பா, உதயநிதின் தாத்தா, இன்ப நிதியின் கொள்ளு தாத்தாவிற்கு மதுரையில் ஒரு நூலகம் கட்டப்பட்டுள்ளது.

மதுரைக்கு வேறு எதுவும் செய்யவும் இல்லை. புதிய திட்டங்கள் கொண்டு வரவும் இல்லை. திமுகவினர் வெட்டக்கூடிய அனைத்து ரிப்பன்களும் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்தான். அன்று டிடிஆர் ரயிலில் இருந்து இறக்கி விட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. திமுகவை வீட்டிற்கு அனுப்பும் பணியை தேர்தல் எப்பொழுது வந்தாலும் நிச்சயமாக தொழிலாளர்கள் செய்வார்கள்" என மே தின நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sellur Raju said PTR audio is trending more than PS2


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->