திராவிட மாடல் காலாவதியானது என பேசுவதா..! ஆளுநர் ஆர்.என் ரவிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என் ரவி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்குமிடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்த ஆளுநர் ஆர்.என் ரவி திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம் காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க மேற்கொள்ளப்படும் முயற்சி என விமர்சனம் செய்திருந்தார். 

ஆளுநரின் இத்தகைய கருத்துக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை ஆளுநரின் பேச்சுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசி அவர் "ஆளுநர் மாநில அமைச்சரவையின் ஆலோசனை அடிப்படையில் செயல்பட வேண்டுமென அரசியல் சாசனம் வகுத்தளித்துள்ளது. அரசியல் சாசனத்தை மீறும் ஆளுநரை உடனடியாக குடியரசுத் தலைவர் திரும்பப் பெறவேண்டும்.

தமிழ்நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சில சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்று எப்படி சொல்ல முடியும் என்று ஆளுநர் கேட்டிருக்கிறார். திராவிட மாடல் காலாவதியான கொள்கை என்றும் பேசியுள்ளார். இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selva Perundagai response to governor comment on Dravida model


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->