விவாகரத்தான கணவன், மனைவியை குடும்பம் நடத்த சொல்லும் தீர்ப்பு... அதிமுகவின் செம்மலை விமர்சனம்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலவையில் உள்ளது. இந்த நிலையில் பழனிச்சாமி தரப்பினர் தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது இன்று இறுதி விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கோஸ் ராய் ஆகியோர் அமர்வின் முன்பு நடைபெற்றது. விசாரணை முடிவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்தும் வகையில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கடிதம் பெற்று அதன் அடிப்படையில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர் செம்மலை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் "சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நபர்கள் கொண்ட அமர்வு கொடுத்த தீர்ப்பு செல்லுமா? செல்லாதா?, அதிமுக பொதுக்குழு செல்லுமா? செல்லாதா? என்ற கேள்விக்கு தான் உச்ச நீதிமன்றம் பதில் சொல்ல வேண்டும், தீர்ப்பு சொல்ல வேண்டும்.

இன்று அவர்கள் சொல்லி இருப்பதை நான் தீர்ப்பாகவே கருதவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு எவ்வாறு உள்ளது என்றால் கீழ் நீதிமன்றத்தில் தான் அரசியல் கட்சிகளை வைத்து பஞ்சாயத்து செய்வார்கள். 

உச்ச நீதிமன்றம் சட்டத்தின் அடிப்படையில் வழக்கில் தீர்ப்பு வழங்கும் என்பது போல் உள்ளது. ஆனால் அவர்கள் பஞ்சாயத்து பண்ண வேண்டிய அவசியம் என்ன? இதற்கான காரணம் என்ன?

கட்டாய திருமணம் செய்ய வலியுறுத்துவதை போன்று இந்த தீர்ப்பு உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆலோசனை கட்டாய கல்யாணம் கூட அல்ல, விவாகரத்து ஆன கணவனையும் மனைவியையும் சேர்ந்து குடும்பம் நடத்துங்கள் என்று சொல்வதைப் போல் உள்ளது" என விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Semmalai criticized Supreme Court verdict in AIADMK case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->