பாஜகவுக்கு ஒன்றோ, இரண்டோ.! அதை அதிமுக முடிவு செய்யும்.!! செம்மலை பதிலடி..!! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு சுற்று பயணமாக தமிழகம் வந்திருந்த நிலையில் நேற்று தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா ''தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை தவறிவிட்டுள்ளது தமிழகம். அதற்கு காரணம் திமுக தான்.

வரும்நாடாளுமன்றத்தேர்தலில் தமிழகத்தின் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்காக வைத்து அனைத்து தொகுதியிலும் பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும்" என தெரிவித்திருந்தார். ஊமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என அமித் ஷா பேசி இருப்பது அதிமுகவினரை அதிருப்தி அடைய செய்துள்ளது.

இந்த நிலையில் அதிமுகவின் அமைப்புச் செயலாளர் செம்மலை "தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி. அதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும் கட்சிகளின் செல்வாக்கை பொறுத்து ஒரு தொகுதியா? அல்லது 2 தொகுதியா? என்பதை அதிமுக தலைமை முடிவு செய்யும். அதிமுக தலைமை ஏற்று கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு அவர்களின் பலத்தைப் பொறுத்து தொகுதிகள் ஒதுக்கப்படும்" என பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Semmalai reply AIADMK will decide one or two for BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->