திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.! - Seithipunal
Seithipunal


செங்கம் அருகே திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள திமுக பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம், திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை, செங்கத்தில் திமுக பிரமுகர் விஜயகுமார் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். 

பெட்ரோல் குண்டு வீசியதில் வீட்டின் வாசலில் நிரூபித்து இருந்த இருசக்கர வாகனம் முழுவதும் தீயில் கருகியது. மேலும், வீட்டு உபயோகப் பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதற்கிடையே, தகவல் அறிந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக பிரமுகர் விஜயகுமாருக்கு முன்விரோதம் உள்ளதா? அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றதா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SENGAM DMK VIJAYAKUMAR HOME ATTACK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->