கூவத்தூரில் முதலில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் இவரா.? ஓபிஎஸ் ஆதாரவாளர் வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


கூவத்தூரில் முதலில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் செங்கோட்டை தான் என்றும் அவர் முதல்வராக பதவி ஏற்க விரும்பவில்லை என மறுத்து விட்டதால் தான் அடுத்த கட்டமாக எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா தேர்வு செய்தார் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் சையத்கான் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்த நிலையில் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும் என அந்த அழைப்பை எடப்பாடிபழனிசாமி மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் இது குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் சையத்கான், 'எடப்பாடி பழனிசாமிக்கு பதவி வெறிபிடித்து உள்ளது என்றும் கூவத்தூரில் முதலில் அவர் முதல்வராக தேர்வு செய்யப்படவில்லை என்றும் செங்கோட்டையன் தான் தேர்வு செய்யப்பட்டார் என்றும் ஆனால் செங்கோட்டையன் முதல்வராக பதவி ஏற்க விரும்பவில்லை என்று கூறியதை அடுத்து அடுத்த கட்டமாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார் என்றும் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், தன்னை முதல்வராக்கிய சசிகலாவுக்கு அவர் துரோகம் செய்தார் என்றும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sengottaiyan for the 1st choice of cm after Jayalalithaa death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->