ஈரோடு கிழக்கில் அதிமுக தனித்து போட்டி... கூட்டணி கட்சிகள் நிலை என்ன...? செங்கோட்டையன் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.

ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளரை அறிவிக்காத நிலையில் தேர்தல் பணிகளை மும்முறமாக மேற்கொண்டு வருகின்றது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்திருந்த நிலையில் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தரப்பும் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று அதிமுகவின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தேர்தலாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அமையும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த தேர்தல் திண்டுக்கல்லில் எப்படி எம்ஜிஆர் ஒரு திருப்புமுனையை காட்டினாரோ அதேபோன்று ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாக எங்களுக்கு அமைந்துள்ளது.

இந்த தேர்தல் அரசியலில் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும். ஈரோடு இடைத்தேர்தலில் தனித்தே களம் காண்கிறோம். அதேபோன்று அதிமுக தலைமையிலான கூட்டணியை பொறுத்தவரை மூன்று நாட்களுக்குள் யார் யார் அமைய போகிறார்கள் என்பதை இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க உள்ளார்.

இன்று பலர் அதிமுக அணி அணியாக பிரிந்து கிடக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் கட்சியில் உள்ள அடிப்படை உறுப்பினர்கள் முதல் பொதுக்குழு உறுப்பினர்கள் வரை 98 சதவீதம் நிர்வாகிகள் எடப்பாடி தலைமையில் இருக்கிறோம். இந்த வெற்றி சரித்திரம் சொல்லும் வெற்றியாக அமையும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sengottaiyan said EPS will announce AIADMK alliance in 3days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->