அமலாக்கத்துறை அலுவகத்தில் செந்தில் பாலாஜி!... சிறையில் இருந்து வெளியே வந்ததும் அதிரடி செயல்!
Senthil Balaji in the Enforcement Directorate action after coming out of jail
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி அனைத்து தரப்பின் வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்கள்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அமலாக்கத்துறை அலுவலகத்தில் திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் வாரத்திற்கு இருமுறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி இன்று காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
English Summary
Senthil Balaji in the Enforcement Directorate action after coming out of jail