செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களுக்கு பிறகு தான் அறுவை சிகிச்சை.. காரணம் என்ன..? முழு விவரம் இதோ..!! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது  ஏற்பட்ட நெஞ்சு வலியின் காரணமாக ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் சென்னை காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நேற்று இரவு மாற்றப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் இருப்பதால் காவேரி மருத்துவமனையைச் சுற்றி புழல் சிறையைச் சேர்ந்த காவல்துறையினர் கட்டுப்பாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க மருத்துவர்கள் தவிர அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய 3 காவலர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் அறைக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என ஓமந்தூரார் மருத்துவமனை டாக்டர்கள் குழுவும், இ.எஸ்.ஐ மருத்துவர்கள் குழுவும் பரிந்துரை செய்திருந்தனர். அதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அவரது மனைவி மேகலாவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. முதற்கட்டமாக செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்பே அறுவை சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தம் மற்றும் இசிஜி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை 3 நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்ய காவேரி மருத்துவமனை டாக்டர்கள் குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவக் கண்காணிப்பில் 3 நாட்கள் வைக்கப்படுவது வழக்கமான செயல்முறைதான் எனத் தெரிகிறது.

அறுவை சிகிச்சைக்கு முன்பாக எந்த விதமான மருந்துகளும் எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும். இசிஜியில் ரத்த அடைப்புகள் கண்டறியப்பட்டதும், ரத்த அடைப்புகளை தவிர்ப்பதற்கான மருந்துகள் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டது. மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போதே அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்பதால் அறுவை சிகிச்சைக்கு முந்தைய ஏற்பாடாக தற்போது செந்தில் பாலாஜிக்கு மருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனையில் டாக்டர்கள் குழுவின் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி 3 நாட்கள் வைக்கப்படுவார் என அவரது உடல்நிலை சீராக இருப்பதை உறுதி செய்யப்படும். அதன்பிறகே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil Balaji surgery after 3 days in Kaveri hospital


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->