முதலமைச்சர் மு.க ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் செந்தில் பாலாஜி! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியை டெல்லியில் சந்திப்பதற்காக  முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து டெல்லி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.

சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சந்திப்பில், தமிழ்நாட்டுக்கு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் மற்றும் சென்னையில் மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட பணிகளுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையியில் டெல்லியில் இருந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சென்னை திரும்பியவுடன் அவரை சிறையியில் இருந்து நேற்று ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

.
அவ்வாறு இல்லையெனில் நாளை ராணிப்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிலையில், அங்கு வைத்து செந்தில் பாலாஜியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil balaji will meet chief minister M.K stalin tonight


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->