அடுத்தடுத்த திருப்பம்... அதிமுகவில் ஓபிஎஸ் வேட்பாளருக்கு புதிய பொறுப்பு..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினர் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

இபிஎஸ் அணி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசுவும் ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகன் என்பவரும் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் ஓபிஎஸ் தரப்பு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவின் அடிப்படையில் நேற்று இறுதி விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை முடிவில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பொது வேட்பாளரை தேர்ந்தெடுத்து அதனை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இதற்கு பொறுப்பாளராக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனை நியமிப்பதாகவும் உத்தரவிட்டனர் 

இதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சார்பில் இன்று அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் வேட்பாளர் ஆதரவு படிவம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக பொது குழு தேர்ந்தெடுத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளராக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பி.செந்தில்குமார் அவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமைக் கழக நிர்வாகிக்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil Murugan appointed as organizational secretary by ops


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->