செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்த மனு! அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
Senthilbalaji ED Case SC new order july 23
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யலாம் என்று, உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
மேலும், உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்காத நிலையில், செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் இருப்பார் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில், ஒரு நீதிபதி "மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு"வை தள்ளுபடி செய்தும், மற்றொரு நீதிபதி செந்தில் பாலாஜியை வழக்கிலிருந்து விடுத்தும் தீர்ப்பு வழங்கி இருந்தனர்.
இதுகுறிதுமின்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி வழக்கில் மூன்றாவது நீதிபதியை நியமித்து, உயர் நீதிமன்றம் விரைவாக வழக்கை விசாரி செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.
மேலும், ஒரு வாரத்திற்குள் மூன்றாவது நீதிபதியை நியமித்து, வழக்கை மெரிட் அடிப்படையில் (முதன்மையான வழக்காக) விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
செந்தில்பாலாஜி தொடர்பான அமலாக்கத்துறையின் இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை வருகின்ற ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
English Summary
Senthilbalaji ED Case SC new order july 23