பாலியல் புகார் அனுப்பியவர் மீதே பாலியல் புகார்.!!‌ கர்நாடக பாஜகவில் களேபரம்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு மக்களவை பொது தேர்தலை சந்தித்துள்ளன. முன்னாள் பிரதமர் தேவ கவுடாவில் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாஜக சார்பில் களமிறங்கியுள்ள நிலையில் ‌ அவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ள‌ விவகாரம் கர்நாடக தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரஜ்வல் ரேவண்ணா தற்போது ஜெர்மனிக்கு தப்பி சென்றுள்ள நிலையில் அவருக்கு நீல நிற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பாஜக தலைமைக்கு கடிதம் எழுதிய பாஜக நிர்வாகி மீது தற்போது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். 

கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக நிர்வாகி தேவராஜே கௌடா மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சொத்து விவகாரத்தில் உதவுவதாக கூறி கடந்த பத்து மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஹோலெநரசிபுரா நகர போலீசார் பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலியல் புகார் அளித்தவர் மீதே பாலியல் புகார் எழுந்திருப்பது கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sexual harassment complaint on KA BJP executive


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->