சாதி பிளவை தோண்டி எடுப்பது.. கருணாநிதி அரசியல்.. ஷியாம் கிருஷ்ணசாமி பரபரப்பு ட்விட்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தை பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற முடிந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் "மாமன்னன் உருவாவதற்கு தேவர் மகனும் ஒரு காரணம்.

தேவர் மகன் பார்க்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி, விளைவுகள், அதிர்வுகள், பாசிடிவ், நெகடிவ் என அனைத்து விதமான உணர்வுகளும் இருந்தது. ஒரு சினிமா, சமூகத்தின் பிரதிபலிப்பினை எப்படி புரட்டி போடுகிறது என ஒரு பக்கமும் மற்றொரு பக்கமாக திரை மொழியாக வேற ஒரு கட்டத்துக்கு எடுத்து செல்கிறது. இந்த மற்றொரு பக்க பிரதிபலிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த படம் சரியா?  தவறா? என தெரியாம அப்படியொரு வலி இருந்தது. ஆனால் இந்த தேவர் மகன் உலகத்துக்குள்ள பெரிய தேவர் இருக்கிறார், சின்னத்தேவர் இருக்கிறார், எல்லாரும் இருக்காங்க. இதுக்குள்ள எங்க அப்பா இருந்தா எப்படி இருப்பாரு, அப்படின்னு முடிவு பண்ணி, எங்க அப்பாவுக்காக பண்ணிய படம் தான் மாமன்னன்.

தேவர் மகன் இத்தனை ஆண்டுகள் தாண்டியும், திரைக்கதையோட மாஸ்டர் பீஸ் ஆக இருக்கிறது. நான் கர்ணன், பரியேறும் பெருமாள் பண்ணும் போது தேவர் மகன் பார்த்துட்டு தான் பண்ணேன். மாமன்னன் பண்ணும் போதும் தேவர் மகன் படத்த பார்த்துட்டு தான் பண்ணேன். தேவர் மகனில் வடிவேலு பண்ணிய இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன். அந்த இசக்கி மாமன்னனா மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் மாமன்னன் படம்" என பேசி இருந்தார்.

இயக்குனர் மாரி செல்வராஜின் இத்தகைய பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களின் சாதியை பெருமையைப் பற்றி பேசியது போன்று தேவர் மகன் அமைந்துள்ளதால் மாரி செல்வராஜ் தனது பட விழா மேடையில் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து மாமன்னன் படத்திற்கு விளம்பரம் தேடிக் கொள்வதாக இணையதள வாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த ஷியாம் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் "உதயநிதி படத்தின் வியாபாரத்திற்காக எங்களுடைய கடந்த கால வலிகளையும், மறைந்து வரும் சாதிகளுக்கிடையே ஆன பிளவுகளையும் தோன்டி எடுத்து பேச்சுப்பொருள் ஆக்குவது அபத்தமானது! நாங்க எதிர்த்த காலம் வேறு, நோக்கம் வேறு. நோக்கம் சமூக நல்லினக்கமாக இருந்தால் இந்த கருணாநிதி அரசியல் இன்று தேவையற்றது" என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shyam Krishnasamy tweet excavating the caste dividen was karunanidhi politics


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->