சித்தராமையா கைது உறுதி?...வீட்டு மனைகளை ஒப்படைத்தார் மனைவி பார்வதி!...அடுத்த நடவடிக்கை என்ன? - Seithipunal
Seithipunal


கடந்த 2021ம் ஆண்டு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முதலமைச்சர்  சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினார். அதன்படி இது குறித்து தாக்கல் செய்த மனுக்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில்  சித்தராமையா மனு தாக்கல் செய்திருந்தார். சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம்,  தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


இந்த விவகாரத்தில் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற உத்தரவின்பேரில் மைசூரு லோக்அயுக்தா போலீசார் முதலமைச்சர்  சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன சாமி உள்ளிட்டோர்  மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதே விவகாரத்தில் சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்திருப்பதாக முதலமைச்சர் சித்தராமையா மீது நேற்று முன்தினம் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.


இந்த நிலையில் நேற்று சித்தராமையா மனைவி பார்வதி, தனது மகனும் மைசூருவில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகம் வந்தடைந்த போது, மூடா ஒதுக்கிய 14 வீட்டு மனைகளுக்கான பத்திரப்பதிவை ரத்து செய்ய கடிதம் அளித்ததை அடுத்து, பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது.

பின்னர் மொகல்லாவில் உள்ள மூடா அலுவலகத்தில் 14 வீட்டுமனைகளுக்கான பத்திரப்பதிவை ரத்து செய்ததற்கான ஆவணங்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அமலாக்கத்துறையால் சித்தராமையா கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Siddaramaiah arrest confirmed wife parvathi handed over the plots what is the next step


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->