0.32% நோட்டாவுக்கும் கீழ் சென்ற காங்கிரஸ் - சிக்கிம் மாநில தேர்தல் முடிவால் அதிர்ச்சில் தொண்டர்கள்! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்துள்ள மக்களவை பொதுத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களின் சட்டமன்ற பொது தேர்தலும் நடந்தது. இதில் அருணாச்சலப் பிரதேசத்தில் முதலமைச்சர் பெமா காண்டு தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

இதேபோல் சிக்கிம் மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. மாநிலத்தின் 24  வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்தது வருகிறது.

இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுது. மேலும் ஒவ்வொரு சுற்று முடிவுகளும் உடனுக்குடன் வெளியானது.

சிக்கிம் மாநிலத்தின் ஆளும் கட்சியாக உள்ள சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) 32 இடங்களில் 26 இடங்களை கைப்பற்றி உள்ளது. மேலும் 5 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

இதன் மூலம் சிக்கிமில் ஆளுங்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது உறுதியாகி உள்ளது.

தற்போது முதலமைச்சராக இருக்கும் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சிக்கன் மாநில சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை காங்கிரஸ்கட்சி பெற்று உள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நோட்டாவுக்கு 0.99 சதவீத வாக்குகளும். காங்கிரஸுக்கு 0.32 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது. ஏற்கனவே மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இல்லை என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கும் நிலையில், சிக்கிம் மாநில தேர்தலில் சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவுக்கு கீழ் காங்கிரஸ் கட்சி வாக்குகளை பெற்றிருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும், இந்த சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் பாஜக பாஜக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாத நிலையில், 5.18 சதவீத வாக்குகளை கைப்பற்றி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sikkim Assermbly Election Congress wash out


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->