கூட்டணிக்குள் சில முரண்பாடுகள் எழலாம்..சொல்கிறார் திருமாவளவன்! - Seithipunal
Seithipunal


தி.மு.க. கூட்டணி கட்சிகளை நல்லிணக்கமாக கையாள்கிறது என்றும் . கோரிக்கைகள் நிறைவேறாமல் இருக்கலாம் ஆனால் . அரசியல் ரீதியாக சில முரண்பாடுகள் எழலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். 

வி.சி.க. துணைப் பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில் நடந்த 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க. குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது.இந்த சூழலில் அவர் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து.. என்றும் கட்சியின் கருத்து அல்ல என்றும், திருமாவளவன் விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில்தான்  ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவித்தார்.இதையடுத்து  ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியி இருந்து விலகுவதாக அறிவித்தார்.இது அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதுடன் தி.மு.க கொடுத்த அழுத்தத்தினால்தான் ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக பேச்சும் எழுந்தது. 

இந்தநிலையில் கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  கூறியதாவது:-கோரிக்கைகள் நிறைவேறாமல் இருக்கலாம். அரசியல் ரீதியாக சில முரண்பாடுகள் எழலாம். அது எந்த கட்சியோடு கூட்டணி வைத்திருந்தாலும் இருக்கக்கூடிய ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 12-ந்தேதி பெய்த கனமழை காரணமாக வீராணம் ஏரியில்  வெளியேற்றப்பட்டபோது  15-க்கும் மேற்பட்ட கிராமங்கள்  மற்றும் விளைநிலங்களும் தண்ணரீல் மூழ்கி வீணாகின. ஆனால்  தமிழக அரசால் வழங்கப்பட வேண்டிய நிவாரணம் இப்பகுதி மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்றும்  அதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது கூறினார்.

மேலும் கொத்தட்டையில் திடீரென உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் . தி.மு.க. கூட்டணி கட்சிகளை நல்லிணக்கமாக கையாள்கிறது என்றும் . கோரிக்கைகள் நிறைவேறாமல் இருக்கலாம் ஆனால் . அரசியல் ரீதியாக சில முரண்பாடுகள் எழலாம். அது எந்த கட்சியோடு கூட்டணி வைத்திருந்தாலும் இருக்கக்கூடிய ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Some conflicts may arise within the coalition Thirumavalavan says


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->