திமுக அமைச்சரவையில் பாஜக வானதி சீனிவாசன்! இணையத்தில் றெக்கை கட்டி பறக்கும் புதிய அப்டேட்!  - Seithipunal
Seithipunal


கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது. 

தமிழகத்தில் பாரதிய ஜனதாவிற்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக வானதி சீனிவாசன் இருந்து வருகிறார். சமீப காலமாக பாரதிய ஜனதா கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என கருதும் அவர், கட்சியில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் அவரது முடிவுக்கு மற்றொரு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக வட தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவராக இருந்த வானதி சீனிவாசன் கணவர் சீனிவாசன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதும் கூறப்படுகிறது. 

இதனை அடுத்து தன்னுடைய எதிர்காலம் பாஜகவில் முடிவுக்கு வருவதாக கருதும் வானதி சீனிவாசன், பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைய முடிவு எடுத்திருப்பதாகவும், கொங்கு மண்டலத்தின் திமுகவின் தளபதியாக இருக்கும் செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு பேசி இருப்பதாகவும், விரைவில் அவர் திமுகவில் இணையலாம் எனவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. 

மேலும் பாஜகவில் இருந்து திமுகவிற்கு வந்தால், திமுக அமைச்சரவையில் வானதி சீனிவாசனுக்கு இடம் ஒதுக்கப்படும் என திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. ஆனால் இந்த தகவல் குறித்து வானதி சீனிவாசன் தரப்பில் இருந்தோ, திமுக தரப்பில் இருந்தோ இதுவரை எவ்வித மறுப்போ, ஏற்போ வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

some news in social media about BJP mla vanathi will move to DMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->