மருத்துவ சீட்டை காப்பாற்ற வக்கில்லாத அரசு நீட்டை ஒழிக்கப்போகிறதா? – திமுகவை புரட்டி எடுத்த எஸ்.பி.வேலுமணி .!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கள்ளச்சாராய மரணம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது பேசிய அவர் "எதுவுமே செய்யாத ஆட்சியின் திமுக ஆட்சி.

எதுவும் தெரியாத முதல்வர் தான் மு.க ஸ்டாலின். இந்தியாவிலேயே முதன்மையான முதல்வர் என சொல்கிறார். ஆனால் எதில் முதன்மை என்று தெரியவில்லை. 30000 கோடி கொள்ளையடிப்பதில் தான் இவர்கள் முதன்மை. முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உண்மையைத் தான் பேசுவார். அதனால் தான் துறையை மாற்றிவிட்டார்கள். ஒரு லோடு மண் சொந்த இடத்தில் எடுத்தால் ஸ்டாலினின் ஆட்கள் வந்துவிடுவார்கள். ஆனால் திமுகவினர் நம்முடைய கனிம வளத்தை கேரளாவிற்கு கடத்துகிறார்கள்.

திமுகவிற்கு உழைத்தவர்கள் ரோட்டில் தான் இருக்கிறார்கள். திமுகக்காரர்கள் திமுகவை விட்டு ஒதுங்கி அதிமுகவில் சேர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கே எது சரியான கட்சி என தெரிகிறது. முதல்வராக இருக்கும் போது எடப்பாடியார் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து பல மாணவர்களின் மருத்துவக் கனவை நினைவாக்கினார். ஆனால் இப்போது 500 இடங்களுக்கான மருத்துவ சீட்டை காப்பாற்ற முடியவில்லை. சிசிடிவி கேமாரா, பயோமெட்ரிக் இல்லை என்ற சிறிய காரணங்களுக்காக மூன்று அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகியுள்ளது. மருத்துவ சீட்டை காப்பாற்ற வக்கில்லாத அரசு நீட்டை ஒழிக்கப்போகிறதா?

ஆர்.எஸ்.புரம் சப் இன்ஸ்பெக்டரை திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் தாக்கியுள்ளனர். திமுக பொதுக்கூட்டத்தில் காவல்துறையை சேர்ந்த பெண் போலிஸ்காரர்களை திமுக நிர்வாகிகள் மானபங்கம் படுத்துகிறார்கள். கள்ளச்சாராய சாவுகள் பெருகிவிட்டது. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். எந்த நலத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. வெளிநாடுகளுக்கு சென்று இருப்பது முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது 30 ஆயிரம் கோடியை முதலீடு செய்யவா என்று எடப்பாடியார் கேட்டுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆவார். இந்த ஆட்சியை நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

முதியோர்கள் உதவித்தொகை அனைவருக்கும் கொடுத்தோம். ஆனால் அதனை ரத்து செய்தது திமுக. வயதானவர்களின் சாபம் சும்மா விடுமா? 8 மணி நேரம் வேலையை 12 மணி நேரமாக மாற்றினார். மீண்டும் அதை திருப்பி வாங்கிவிட்டு, ரத்து செய்ததை பெருமையாக பேசுகிறார். அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பதும் வெல்வோம்" என ஆர்ப்பாட்டத்தின் போது பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SP Velumani severely criticized the DMK govt and MKStalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->