ஆளுங்கட்சிக்கு சாதகமாகும் சபாநாயகர் தேர்தல், வாக்களிக்க முடியாத நிலையில் 5 எம்.பி.க்கள் !! - Seithipunal
Seithipunal


மக்களவை கூட்டத்தொடர் தொடங்கி தற்போது வரை மூன்று நாட்கள் ஆன நிலையில், இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. வரலாற்றில் முதல்முறையாக 18வது மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது எதிர்க்கட்சிக்கு மிகக் குறைவான எம்.பி.க்கள் இருப்பதாலும், அவர்களில் ஐந்து எம்.பி.க்கள் இன்னும் மக்களவை உறுப்பினராக பதவிப் பிரமாணம் எடுக்காததால், அவர்கள் தற்போது  வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளனர். 

இந்த சபாநாயகர் தேர்தல் எதிர்க்கட்சிகளை மேலும் பின்னுக்கு தள்ளுகிறது. எதிர்க்கட்சிகளின் 232 எம்.பி.க்களில் இதுவரை 227 பேர் மட்டுமே பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். மக்களவை உறுப்பினராக தற்போது வரை உறுதிமொழி எடுக்காத ஐந்து எம்.பி.க்களில் மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் மற்றும் டி.எம்.சி மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா ​​ஆகியோர் அடங்குவர்.

மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் இந்த ஐந்து பெரும் வாக்களிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தீபக் அதிகாரி மற்றும் நூருல் இஸ்லாம், சமாஜ்வாதி கட்சி எம்பி அப்சல் அன்சாரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதை தவிர மேலும் இரண்டு சுயேச்சை எம்பிக்களும் இன்னும் பதவியேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதி முக்தார் அன்சாரியின் மூத்த சகோதரர் அப்சல் அன்சாரி. தேர்தலில் போட்டியிட அன்சாரிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நீதிமன்றம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. அன்சாரிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மக்களவை சபாநாயகர் தேர்தலை கருத்தில் கொண்டு, தேர்தலில் போட்டியிடுவதற்காக அப்சலின் சிறை தண்டனையை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Speaker election in favor of ruling party 5 MPs unable to vote


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->