ஸ்டாலினின் சொந்த தொகுதிக்கே ஆப்பு.! புள்ளிவைத்த முக்கிய கட்சி., கலக்கத்தில் திமுக.!
stalin own Constituency may get bjp
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டால் அவரை எதிர்த்து அண்ணாமலையை நிற்க வைக்கும் திட்டத்தில் தமிழக பாஜக இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும், படுதீவிரமாக தேர்தலில் வெற்றி பெறுவது பற்றி யோசித்து வருகிறார்கள். தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை தோல்வியுற செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தனி கவனம் செலுத்தி வருகிறது.
தேர்தலின் தொடர்ச்சியாக ஒரே தொகுதியில் நின்று வெற்றி பெறுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதுபோல் கொளத்தூர் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு, இருமுறையும் வெற்றி பெற்றவர் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த வெற்றியினை குறிவைத்து அண்ணாமலை என்ற ஆயுதத்தை பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, வரும் சட்டமன்றத்தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் நிற்ப்பாரேயானால் அவருக்கு எதிராக அண்ணாமலையை நிற்கவைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. ஸ்டாலினுக்கு எதிராக இளைஞர் சக்தியை ஒன்று திரட்ட நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கை இந்தி மொழி விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை வெளிக்காட்ட அண்ணாமலை தான் சரியானவர் என்று அக்கட்சியின் மேலிடம் நினைக்கிறது.
திமுகவில் இருக்கும் வாரிசு அரசியலை ஸ்டாலின் ஊக்கப்படுத்துவதாக கூறி அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. அவ்வாறு பிரச்சாரம் செய்தால் தமிழ்நாட்டில் தங்களுக்கான வெற்றி பிரகாசமாக இருக்கும் என பாரதிய ஜனதா நினைக்கிறது. இதன் காரணமாக கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் களமிறங்குவார், ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட அண்ணாமலை எந்நேரமும் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
stalin own Constituency may get bjp