ஸ்டாலினின் கோரிக்கைக்கு தலையசைத்த மோடி! கல்வி மாநில பட்டியலுக்கு வருமா? - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் காந்திபுரத்தில் அமைந்துள்ள காந்திய கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஆளுநர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய ஸ்டாலின் "இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்த காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு அதிக முறை வந்துள்ளார். தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாட்டுக்கு காந்தியடிகள் வருகை புரிந்துள்ளார். அவர் தமிழை விரும்பி கற்றுள்ளார். வட இந்தியர்கள் அனைவரும் ஒரு தென்னிந்திய தமிழ் மொழியை கற்க வேண்டும் என கூறியதோடு அது தமிழாக இருக்க வேண்டும் எனவும் காந்தியடிகள் சொல்லியுள்ளார். 

தமிழகத்தில் காந்தியடிகள் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளதை நான் வரவேற்கிறேன். கல்வியின் மூலம் மனிதரை சமூகத்திற்கு பயனுள்ளதாக மாற்ற நோக்கமாக இந்த கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில கட்டுப்பாட்டில் 22 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. 

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் புதுமைப்பெண் திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றில் பயில நிதி உதவி என உயர்கல்வி பெறுவதில் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. நான் முதல்வராக பதவியேற்ற பின்பு இல்லம் தேடிய கல்வி, கல்லூரி கனவு போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன் என பேசினார்.

மேடையில் பேசும்பொழுது மோடி புரிந்து கொள்ளும் வகையில் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதை புரிந்து கொண்ட மோடி ஸ்டாலினை பார்த்து பொறுமையாக தலையசைத்தார். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென நீண்ட நாட்களாக பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் ஸ்டாலினின் இந்த பேச்சு அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin requested to Modi Education should includes in state list


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->