"வாய்க்கு வந்ததை உளறி வருகிறார்" - பாஜகவின் அண்ணாமலைக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
state president talks like clown anbil mahesh takes a dig at annaamalai
மக்களை திசை திருப்புவதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்ட விழா நாவல்பட்டு அண்ணா நகரில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிகள் பாலைவனமாக மாற்றிவிட்டு சென்றுவிட்டனர். அந்தப் பாலைவனத்தை நாங்கள் தற்போது சோலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டார். வடமாநில பத்திரிக்கைகளும் தமிழ்நாட்டை தான் நம்பர் ஒன் என குறிப்பிடுகின்றன. தமிழக முதல்வர் தான் நம்பர் ஒன் முதல்வராகவும் இருக்கிறார் என பாராட்டினார்.
மேலும் ஒரு கட்சியின் மாநில தலைவர் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஒரு பட்டியலை வெளியிட்டு இருக்கிறார். அது பழைய படத்தில் வரும் நகைச்சுவை காட்சியை போன்றிருப்பதாக தெரிவித்தார் ஒரு நபர் ஆயிரம் என்றால் அடுத்த நபர் 2000 என்று கூறுவார். அந்த நகைச்சுவை போன்று உள்ளது என தெரிவித்தார் அமைச்சர். மேலும் மக்களிடம் ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது அவர்களது மனதில் பதிந்து உண்மையாகிவிடும் என அண்ணாமலை திட்டமிட்டு போய் கூறி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
English Summary
state president talks like clown anbil mahesh takes a dig at annaamalai