நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளின் நிலவரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 12 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்கு பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர். மேலும் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், வாக்காளர்கள் குடையுடன் வந்து ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 9 மணிவரை பதிவான வாக்குகளின் நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி,

காஞ்சிபுரம் - 11.03%
கடலூர் - 10.11%
தி.மலை - 18.5%
விருதுநகர் - 8.9% 
ராமநாதபுரம் - 8.88%
தஞ்சை - 6.1%
புதுக்கோட்டை - 11%
சேலம் - 12.97%
தேனி - 12% 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

status of registered votes in local body election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->