சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் துறைவாரியாக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர்  பிரசாந்த், எம்.பி.க்கள் மலையரசன், ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அப்போது, வருவாய்த்துறையில் மனுக்களை நிராகரிக்காமல் அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்திய அவர், மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மாவட்டம் உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வைத்துள்ள சில கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Steps should be taken to prevent road accidents udhayanidhi stalin instructions to highway officials


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->