கொரோனா தடுப்பூசியால் பேசும் திறனை பெற்ற நபர்.! மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட பின்னர், நடக்கும் திறனையும், பேசும் திறனையும் பெற்றிருப்பது பெரும் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் பொக்காரோவின் சால்கதி கிராமத்தைச் சேர்ந்த துலார்சந்த் முண்டா என்ற 55 வயது நபர் ஒருவர், கடந்த 4ஆம் தேதி தடுப்பூசி எடுத்துக் கொண்டார். அவருக்கு அந்த பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் கோவிஷீல்டு என்கிற தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

இவர் 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விபத்தில் சிக்கி பக்கவாதத்துக்கு ஆளான நபர் ஆவார். மேலும் இந்த பக்கவாதத்தின் காரணமாக இவர் பேசும் திறனையும், நடக்கும் திறனையும் இழந்திருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு செலுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி காரணமாக, அவருக்கு தற்போது பேசும் திறனும், நடக்கும் திறனும் கிடைத்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து துலார்சந்த் முண்டா என்ற அந்த நபரை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது இது மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stroke person after injected corona vaccine ability to walk and speak


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->