ஸ்டாலினை கண்டால் தமிழக பாஜகவுக்கு பயம்..!! சேம் சைடு கோல் அடிக்கும் சுப்பிரமணியசாமி..!! - Seithipunal
Seithipunal


பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடந்த சில நாட்களாக தமிழக அரசு மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலைத்துறை சார்பில் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் குறித்து தமிழக அரசு எச்சரிக்கும் வகையில் அறிக்கை விடுத்திருந்தார். அதே போன்று பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரத்தில் தமிழக அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாக தெரிவித்த அவர் தமிழக அரசை கலைக்க நேரிடும் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழகத்தில் நான் மட்டும் தான் திமுகவுக்கு எதிராக பேசி வருகிறேன். என்னை பார்த்தால் தான் திமுகவுக்கு எதிர்க்கட்சி போல் தெரிகிறது. ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழக பாஜக செயல்படுகிறது.

தமிழக பாஜகவை சினிமா கலாச்சாரம் சீரழித்து விட்டது" என பகிரங்கமாக விமர்சனம் செய்துள்ளார். பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் தமிழக பாஜகவை விமர்சனம் செய்தது தமிழக பாஜகவினரிடையே பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Subramania Swamy criticizes TNBJP feared after seeing Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->