திருமணமாகாத பெண் கருக்கலைப்பு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


டெல்லியைச் சேர்ந்த திருமணமாகாத பெண் ஒருவர் கர்ப்பமடைந்துள்ளார். இதனால் அவர் கருக்கலைப்பு செய்துகொள்ள மருத்துவமனை சென்றுள்ளார். திருமணமாகாதவர் என்ற காரணத்தினால் மருத்துவர்கள் அவருக்கு கருக்கலைப்பு செய்ய  மறுத்துள்ளனர்.

இது குறித்து அந்த பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, "ஒரு பெண் திருமணமாகாதவர் என்ற ஒரே காரணத்தினால் அவருக்கு கருக்கலைப்பு உரிமையை மறுக்க முடியாது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அந்த பெண்னை பரிசோதனை செய்து கருக்கலைப்பால் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று உறுதியானால் கருக்கலைப்பு செய்யலாம்.

அந்தப் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய இயலாத நிலை ஏற்படின் அந்தப் பெண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு செல்லலாம். குழந்தை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்படும்". என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court verdict unmarried woman have an abortion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->