அண்ணாமலை இருக்கும் வரை பாஜகவிற்கு ஒரு சீட்டு கூட கிடைக்காது - எஸ்.வி. சேகர்.!
SV sekar roasted BJP annamalai
அண்ணாமலை இருக்கும் வரை பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என எஸ் வி சேகர் விமர்சனம் செய்துள்ளார்.
வரும் 2024 நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சிவகங்கை மதுரை மாவட்டங்களை கடந்து ஒவ்வொரு தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார். இதனிடையே அண்ணாமலை நடப்பதில்லை என்றும் வாகனத்திலேயே சொகுசாக செல்வதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் அண்ணாமலையும் நடைப்பயணம் குறித்து பாஜக பிரமுகர் எஸ் வி சேகர் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து பேசி அவர், 'அண்ணாமலை இருக்கும் வரை பாஜகவிற்கு ஒரு சீட் கூட கிடைக்காது. அதேபோல் அதிமுகவின் ஒரு வாக்கு கூட பாஜகவிற்கு கிடைக்காது. அண்ணாமலையில் நடை பயணத்தால் பாஜகவிற்கு நஷ்டம், அவருக்கு தான் லாபம்' என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், 'தமிழ்நாடு பாஜக தலைமை சரியான நிலைமையில் இல்லை என்றால் எல்லாம் கீழே ஆடத்தான் செய்யும். தலைவருக்கு பேருந்தில் நடை பயணம் செல்லவே நேரம் இல்லை. சிங்கம் என அவரே சொல்கிறார். ஆனால் நடப்பதை பார்த்தால் கிழ சிங்கம் போல் தெரிகிறது. இந்த நடை பயணத்தால் ஒரு தாக்கமும் ஏற்படாது. அண்ணாமலை அரசியல் தமிழ்நாட்டில் பூஜ்ஜியம்' என தெரிவித்துள்ளார்.
English Summary
SV sekar roasted BJP annamalai