மீண்டும் மீண்டுமா.."சொந்தக் காசில் வாழ்பவனே மானஸ்தன்".. அட்டாக் மோடில் எஸ்.வி சேகர்..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவரது குடும்பம் மற்றும் திமுக எம்பி அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். இதற்கு திமுக தரப்பிலிருந்து எதிர்ப்புகளையும் கிளம்பியுள்ள நிலையில் அண்ணாமலை 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அவர் மீது வழக்கு தொடரப்படும் எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு மாநில தலைவராக மாதம்தோறும் தனக்கு 7 முதல் 8 லட்சம் ரூபாய் செலவாகுவதாகவும், இந்த செலவுகள் அனைத்தையும் தன்னை சுற்றியுள்ள நண்பர்களும், நல்லவர்களும் பார்த்துக் கொள்வதாகவும் பேசி இருந்தார். 

இந்த நிலையில் பாஜக ஆதரவாளரும் இயக்குனரும் நடிகருமான எஸ்.வி சேகர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஊழல் பட்டியல் வெளியிட்டதிலிருந்து கலாய்த்து வருகிறார்.  குறிப்பாக நேற்று "என்ன பரிட்சை எழுதி என்ன பிரயோஜனம். புக்கை பார்த்து தான் எழுதினதா சொன்னாங்க கடைசீல 10 வருஷ பழைய ஆனந்த விகடன் நக்கீரன் பார்த்து எழுதின மாதிரி இருக்கு" எனவும், என்னங்க அந்த பையன் பாஸ் பண்ண வாய்ப்பே இல்லையே. ஏங்க, இன்னிக்கு கேள்வி பேப்பர் கொடுத்தா அடுத்த வாரம் தான் பதில் சொல்வேங்கிறான்" என பங்கமாக கலாய்த்து இருந்தார்.

மேலும் "ஏங்க இந்த ஒரு மணி நேரமா இத்தனை கம்பளெயிண்ட் சொல்றேன். சும்மா சிரிக்கிறீங்க. டேய் போலீஸ் ஸ்டேஷன்ல சொல்ல வேண்டியதை போட்டி கடையில் வந்து சொல்லிக் கொண்டிருக்க இடத்தை காலி பண்ணு" எனவும் கலாய்த்திருந்த நிலையில் இன்று "லட்ச ரூபாயில் அடுத்தவன் காசில் அமோக வாழ்பவனை விட ஆயிரம் ரூபாய் சொந்த காசு வாழ்பவனே மானஸ்தன், நேர்மையானவன், தலைவனுக்கு தகுதியானவன். ஜெய்ஹிந்த்" என முன்னாள் முதல்வர் காமராஜரின் புகைப்படத்துடன் அண்ணாமலையை பங்கமாக மீண்டும் கலாய்த்து உள்ளார். பாஜக ஆதரவாளராக இருந்து வரும் எஸ்.வி சேகர் தொடர்ந்து அண்ணாமலையை விமர்சனம் செய்து வருவது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sve shekher criticized tn bjp annamalai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->