பெருமாள் கோயில் அறங்காவலராக இஸ்லாமியரா? ஹெச்.ராஜ பரப்பிய வதந்தி! உண்மை என்ன? இதோ!
Tamil Nadu Fact Check BJP H Raja post
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா நேற்று விடுத்த செய்திக்குறிப்பில், "தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா நெடுந்தெரு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகோபால பெருமாள் கோவிலின் அறங்காவலராக நர்கீஸ் கான் என்கிற இஸ்லாமியரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நியமித்திருக்கிறார்கள்.
பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை... இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா? இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சி" என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்க்கும் குழு இதனை மறுத்து உள்ளது. அதில், "அவர் இஸ்லாமியர் அல்ல.
"தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அமைந்துள்ள ரெகுநாதபுரம் கிராமம் அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் அறங்காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நர்க்கீஸ்கானின் தந்தை பெயர் தங்கராஜ்.
தங்கராஜ். அவர் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை. மிகச் சிக்கலான நிலையில் பிரசவம் பார்த்த மருத்துவர் நர்க்கீஸ்கானின் பெயரை அவருக்கு வைத்துள்ளார்கள்" என்று கோயில் செயல் அலுவலர் விளக்கமளித்துள்ளார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu Fact Check BJP H Raja post