அதிரடியில் இறங்கிய நடிகர் விஜய்! மொத்தம் 3 லட்சமாம்..! அடேங்கப்பா... அசரவைக்கும் ஏற்பாடுகள்! - Seithipunal
Seithipunal


வரும் அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் செய்து வருகிறார்.

இந்நிலையில், மாநாடு ஏற்பாடுகள் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கட்சியின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும், குறைந்தது 6,000 முதல் 10,000 பேரை அழைத்து வர வேண்டும் என வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. 

தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து குறைந்தது 3 முதல் 4 லட்சம் பேரை மாநாட்டில் பங்கேற்க வைக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

லட்சக்கணக்கில் தொண்டர்கள் வருவார்கள் என்பதை காவல்துறையிடம் கூறி, அதற்கான ஏற்பாடுகளை வழங்க தனியாக கோரிக்கை விடுக்கவும் தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது. 

மாநாடு மேடையில் விஜய்யுடன், அனைத்து  மாவட்ட செயலாளர்களையும் அமர வைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்து வர அறிவுறுத்தல் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மாநாட்டுக்கு வரும் வாகனங்களின் பதிவெண், இன்சூரன்ஸ், ஆர்.சி. புத்தகத்தை முன்கூட்டியே கட்சி தலைமைக்கு அனுப்ப விஜய் கட்டளை இட்டு உள்ளதாகவும், தொண்டர்களின் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ள தனியாக ஒரு வழக்கறிஞர் பிரிவை உருவாக்கி உள்ளார் என்று வெளியான தகவல் தெரிவிக்கின்றன.

மாநாட்டிற்கு வரும் பொது வாகனங்களுக்கு யாரேனும் தடை ஏற்படுத்தினாலோ, வாகனங்கள் பிரச்சினையில் சிக்கினாலோ அதை தீர்க்க தனியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்களாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilaga vetrri kazhagam Vijay  manadu


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->