த.வெ.க மாநாட்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடந்த நபருக்கு செருப்படி!  - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை, கோட்பாடு அனைத்தும் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. '

கட்சியின் கொள்கை தலைவர்களாக காமராஜர், பெரியார், அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் உள்ளிட்ட ஐந்து தலைவர்கள் இருப்பார்கள் என்று கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இளம் பெண் ஒருவர், மாநாட்டில் தன்னிடம் ஒரு நபர் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அப்போது அவரின் தாயார் அந்த நபரை செருப்பால் அடித்ததாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் மாநாட்டில் பாதுகாப்பாக உணர்ந்ததாகவும், இளைஞர்கள் பாதுகாப்பாக எங்களை அழைத்து கொண்டு வந்து விட்டார்கள் என்றும் அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் விஜயின் பேச்சு அருமையாக இருந்ததாகவும், கட்சியின் கொள்கை சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

காணொளி நன்றி : நியூஸ் தமிழ் 24*7


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilaga Vettri Kazhagam Young Woman some issue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->