ஈரோடு கிழக்கில் அதிமுக..எம்ஜிஆர் மாளிகைக்கு பறந்த கடிதங்கள்... டெல்லிக்கு விரைந்தார் தமிழ்மகன் உசேன்..!! - Seithipunal
Seithipunal


இன்று காலை 9 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டார் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்..!!

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தொடர்பாக பொது குழு உறுப்பினர்கள் அனுப்பிய கடிதங்களுடன் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க உள்ளார்.

இதற்காக இன்று காலை 9 மணி அளவில் விமான மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர்களும் சென்றுள்ளனர்.

நேற்று மாலை 7 மணி வரை அதிமுகவின் 85 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் தொடர்பான விருப்ப கடிதங்களை அளித்ததன் அடிப்படையில் தமிழ்மகன் உசேன் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

அதிமுகவில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பதில் உச்சகட்ட குழப்பம் நீடிக்கும் நிலையில் இந்த டெல்லி பயணம் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 இதற்கிடையே அதிமுகவை தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பியுள்ள கடிதத்தில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவை முன்மொழிந்து உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் பதவி குறித்து ஏதும் இல்லாததால் அவர் எந்த பொறுப்பில் இருக்கிறார் என ஓபிஎஸ் தரப்பு கேள்வி இருந்தது.

மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அதிமுக அவைத்தலைவர் செயல்படவில்லை என்றும், இது போன்ற சட்ட மீறல் செயலுக்கு நாங்கள் ஒருபோதும் துணை போக மாட்டோம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilmagan Usain went to Delhi with AIADMK GC members letter


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->