இனியாவது கண்டுக்கொள்வீர்களா? இல்லை வெள்ளத்தில் மூழ்கடிப்பது தான் திமுகவின் விடியல் ஆட்சியா? லிஸ்ட் போட்ட பாஜக! - Seithipunal
Seithipunal


திமுகவின் மாற்றாந்தாய் மனப்பக்குவத்தால் தமிழகம் வெள்ளத்தில் மிதப்பதாக தமிழ்நாடு பாஜக விமர்சித்துள்ளது.

இதுகுறித்த அதன் அறிக்கையில். "தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களே! 

❓வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளில் தலைநகர் சென்னையை மட்டும் தலைச்சன் பிள்ளையாய் சீராட்டி, பிற மாவட்டங்களை உதாசீனப்படுத்துவது ஏன்? அதிலும் குறிப்பாக வட தமிழகத்தை கைவிடுவது ஏன்? 

❓தாங்கள் ₹4, 000 கோடி செலவழித்ததாய் கணக்கு காட்டப்பட்டுள்ள சென்னையே வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், தங்களால் கை கழுவி விடப்பட்ட மற்ற மாவட்டங்கள் வெள்ள நீரில் மூழ்குவது ஆச்சரியமில்லை தானோ? 

❓நாகப்பட்டினத்தில் மட்டுமே 5,000 ஹெக்டேர் விவசாய நிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தர்மபுரியில் கனமழையால் சம்பா பயிர்கள் சேதமடைந்துள்ளன. "நான் டெல்டாக்காரன்" என பெருமை பேசும் நீங்கள், ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போது பயிர் பாதுகாப்பைத் தவறவிடுவது ஏன்?

❓சேலத்தில் அதிகனமழை காரணமாக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டு ஏற்காட்டில் உள்ள 22 கிராமங்களுக்கான சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்க் கொள்ளக்கூடிய உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தித்தர இயலாதது தான் தங்கள் திராவிட மாடலா?


 
❓ திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் குடியிருப்பின் மீது பாறை விழுந்து 7 நபர்கள் மாயமாகி பதினெட்டு மணிநேரம் கடந்த பின்பும் மீட்க இயலவில்லை. பேரிடர்களை எதிர்கொள்ளத்தக்க வசதிகள் கூட இல்லாத நிலையில்தான், "தமிழகம் முன்னேறிய மாநிலம்" என தங்கள் அரசு பெருமை கொள்கிறதா ? 

❓எப்பொழுதும் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டும் கடலூருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு வீடியோ காலில் விசாரிப்பது தான் முறையா? 

❓விழுப்புரத்தான் வாய்க்கால், கோலியனூரான் வாய்க்கால் ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டும் இரண்டே நாள் மட்டும் தூர் வாரி விழுப்புரத்தை வெள்ளத்தில் அவதியுற வைத்தது ஏன்? 

இப்படி தங்களின் அக்கறையின்மையினால் இன்று அல்லல்படும் பிற தமிழக மாவட்டங்களை இனியாவது கண்டுக்கொள்வீர்களா? இல்லை வெள்ளத்தில் மூழ்கடிப்பது தான் திமுகவின் விடியல் ஆட்சியா?


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Rain Flood TNBJP Condemn to DMK MK Stalin Govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->