கோடிகளை குவித்த டாஸ்மாக் மதுவிற்பனை.! இரண்டே நாள் தான்., இவ்வளவு கோடி ரூபாய்க்கு விற்பனையா?!
tasmac sale report 2022 jan 13
இந்த பொங்கல் பண்டிகையின்போது மது விற்பனை பாதிக்கப்படாத அளவுக்கு, பல்வேறு நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் வருகின்ற 15ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது., மேலும் 16 ஆம் தேதி முழு ஊரடங்கு காரணமாக மது கடைகள் மூடப்படுகின்றன.
தொடர்ந்து இரண்டு நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் நிலை உள்ளதால், மது பிரியர்களுக்கு மது தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க, இன்று (14ஆம் தேதி வெள்ளிக்கிழமை) பொங்கல் தினத்தன்று கூடுதலான மது விற்பனையை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக மது பாட்டில்களை ஸ்டாக் வைத்து, அதிக விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களில் டாஸ்மார்க் கடைகளில் 358 கோடியே 11 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 12ஆம் தேதி அன்று 155 கோடியே 6 லட்சம் ரூபாய்க்கும், நேற்றைய தினம் 203 கோடியே 5 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய ஒரு நாள் மட்டும் 300 கோடி ரூபாய்க்கும் மேலாக மது விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
tasmac sale report 2022 jan 13