பாஜகவுக்கு எதிராக தேசியக்கட்சியை தொடங்கும் சந்திரசேகரராவ்.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பாஜகவுக்கு எதிராக விரைவில் தேசிய கட்சி தொடங்கப்படும் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் தெரிவித்திருந்தார்.

வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் தெலுங்கானா மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். 

இந்த நிலையில், விரைவில் தேசிய கட்சி தொடங்கப் போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அப்போது அவர், தெலுங்கானா இயக்கத்தை தொடங்குவதற்கு முன்பு செய்ததுபோல், அறிவுஜீவிகள், பொருளாதார நிபுணர்கள், பல்துறை நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினோம். 

அதில், தேசிய அளவில் மாற்று கட்சி தொடங்குவது குறித்து கருத்து ஒற்றுமை ஏற்பட்டது. விரைவில் தேசிய கட்சி தொடங்கப்படும். அதற்கான கொள்கைகள் வகுக்கும் பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், விஜயதசமி அன்று தேசிய கட்சி குறித்து சந்திரசேகர ராவ் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இது குறித்து கிடைத்த தகவலின் படி சந்திரசேகர ராவ் தேசிய அரசியலை நோக்கி நகர்ந்து வருகிறார். விஜயதசமி நாளில், தேசிய கட்சிக்கான விவரங்களை அவர் அறிவிப்பார். அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயர் மாற்றப்படலாம். ஆனால், தேசிய கட்சியாக உடனடியாக அறிவிக்கப்படாது என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana CM Chandrasekhar Rao is launching the National Party soon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->