நடுநிலையாக இருக்க வேண்டிய தமிழிசை சௌந்தர்ராஜன் பாஜகவின் ஏஜெண்டாக செயல்படுகிறார்! - Seithipunal
Seithipunal


ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் பாஜகவில் இணைந்து விடலாம்!

மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக பாஜக அல்லாத மாநிலங்களில் தன் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு ஆளுநர் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்து வருகிறது பாஜக. இதன் காரணமாக மாநில அரசுகளின் கொள்கைக்கு முரணாக ஆளுநர்கள் செயல்படுவது தொடர் கதையாகி வருகிறது. மேலும் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் ஆளுநராக பொறுப்பேற்ற பின் பாஜகவிற்கு ஒரு ஏஜென்ட்டாக செயல்படுவதாக பல அரசியல் கட்சிகளால் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தமிழக பாஜகவின் தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் பணியாற்றி வருகிறார்.

ஆளுநருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் பொழுது எந்த ஒரு அரசியல் சார்பும் இல்லாமல் செயல்படுவேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இதற்கு முரணாக டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நடந்து கொண்டுள்ளார். பாஜக சார்பில் ட்விட்டர் ஸ்பேஸில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் தென்னிந்தியாவுக்கான பாஜகவின் வியூகம் பற்றி கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் அழையா விருந்தாளியாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு கலந்துரையாடலை கேட்டு வந்துள்ளார்.

இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்த இணையதளவாசி ஒருவர் தமிழிசை சௌந்தர்ராஜன் குறிப்பிட்ட ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டில் "தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இப்பொழுது தனது அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து தென்னிந்தியாவிற்கான பாஜகவின் 2024 தேர்தலுக்கான வியூகம் என்ற கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார். நடுநிலையாக இருக்கவேண்டிய ஆளுநர் தற்பொழுது முற்றிலும் பாஜக ஏஜெட்டாக செயல்படுகிறார். வெட்கக்கேடானது என பதிவிட்டுள்ளார்.

தற்பொழுது இந்த பதிவு இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் ஒரு பதவியான கவர்னர் பதவியில் இருந்து கொண்டு இது போல் தேர்தல் பணி பார்க்கலாமா தமிழிசை அவர்களே. ஒரு மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இனி இவரால் செயல்பட முடியுமா? பாஜகவினர் இதுபோன்ற வெளிப்படையாக நடந்து கொண்டு மரியாதையை கெடுத்துக் கொள்கிறனர். ஆளுநராக இருந்து கொண்டு பாஜகவின் ஏஜெண்டாக செயல்படும் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பாஜகவில் இணைந்து விடலாம்  என இணையதள வாசிகள் தமிழிசை சௌந்தர்ராஜனை விமர்சனம் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana Governor Tamilisai Soundarrajan attend twitter space discussion about BJP strategy for South India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->