ஊழல் அரசியல், குடும்ப அரசியல் இருக்கும் இடத்தில் வாரிசு அரசியல் இருக்கும் - போட்டுத்தாக்கிய பிரதமர் மோடி!
Telangana PM Modi Speech Against Family Politics
தெலுங்கானாவில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு தடையாக இருப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டி பேசியுள்ளார்.
ரூ.11000 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் மற்றும் செகந்திராபாத்-திருப்பதி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, "மத்திய அரசால் வழங்கப்படும் நலத் திட்டங்களை தெலுங்கானா மக்கள் அனுபவிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் .
ஆனால், ஆளும் அரசு ஒத்துழைப்பு தர தொடர்ந்து மறுத்து வருகிறது. எங்கள் நலத்திட்டங்கள் மக்களை சேராமல் தடுக்கும் வகையில் மாநில அரசு செயல்பட கூடாது என்று நான் கேட்டு கொள்கிறேன்.
மத்திய அரசுக்கு போதுமான ஒத்துழைப்பு தெலுங்கானா ஆளும் அரசிடம் இருந்து கிடைக்கவில்லை. இதனால் மக்களுக்கான பல வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டு, உள்கட்டமைப்பு பணிகள் தாமதம் ஆகின்றது.
குடும்ப அரசியல் இருக்கும் இடத்தில் வாரிசு அரசியல் இருக்கும். ஊழல் அரசு மற்றும் வாரிசு அரசியலை எதிர்த்து போராடும் எங்களுடன் மக்கள் கைகோர்க்க வேண்டும்.
ஊழல் மற்றும் அதிகார எண்ணத்தில் உள்ளவர்கள் மக்களின் முன்னேற்றங்களை தடுக்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதமர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், முதல்வர் சந்திரசேகர ராவுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவர் நிகழ்ச்சியை புறக்கணித்து தனது எதிர்ப்பை காண்பித்துள்ளார்.
English Summary
Telangana PM Modi Speech Against Family Politics