'மேக் இன் இந்தியா' இல்லை 'ஜோக் இன் இந்தியா' - மத்திய அரசை விமர்சனம் செய்த தெலுங்கானா முதல்வர்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை ஜோக் இன் இந்தியா என்று தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் விமர்சனம் செய்துள்ளார்.

தெலுங்கானா முதல்வரும், பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர் ராவ் தற்போது தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தனது கட்சியான ராஷ்டிரிய சமிதி என்ற கட்சியை பாரத் ராஷ்ட்ரிய சமிதி என பெயர் மாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதன்படி பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை ஜோக் இன் இந்தியா என கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் 54 ஆண்டுகளாக ஆட்சி செய்தது. பாஜக 16 ஆண்டுகள் ஆட்சி செய்தது என்றும் மொத்தத்தில் இந்தியாவை 75 ஆண்டுகளில் 70 ஆண்டுகள் இந்த இரு கட்சிகள் தான் ஆட்சி செய்துள்ளது. இதனால்தான் நாட்டில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் எல்லா பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

'மேக் இன் இந்தியா' பிரச்சாரம் எதுவும் சாதிக்கவில்லை என்றும் சீன பொருட்கள் தான் இந்தியாவில் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெற்றிருந்தால் ஒவ்வொரு ஊரிலும் சைனா பஜார் எப்படி இருக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telungana CM speech about make in India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->