குடியரசுத் தலைவர் தேர்தல் : எதிர்க்கட்சி பொது வேட்பாளருக்கு.. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆதரவு.! - Seithipunal
Seithipunal


ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்கா தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்கா இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, அவருடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அவருடன் செல்கிறார்கள்.

இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவிற்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், வேட்பு மனு தாக்கலின்போது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பங்கேற்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telungana rashtriya samithi party support yashwant sinha


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->