அடுத்தடுத்து முதல்வர்களை சந்திக்கும் தளபதி விஜய்.. அடுத்த திட்டம் என்ன.? - Seithipunal
Seithipunal


தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை நடிகர் விஜய் சந்தித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத தளபதி66 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி படிபள்ளி இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி பூஜையுடன் தொடங்கிய தளபதி 66 படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். தற்போது இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathy Vijay meet Telungana chief minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->