மைக்கேல்பட்டி மாணவி விவகாரம் : மனு தள்ளுபடி - போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு!
Thanjavur Michalpatti school girl death protest case
தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டி தூய இருதயமேரி பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவி, கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டார். பள்ளி விடுதி அறையை சுத்தம் செய்யச் சொல்லி வார்டன் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
வார்டன் கைது ::
மதமாற்றம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் மாணவி பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சை எழுப்பியது. மேலும் விடுதி வார்டன் சகாய மேரியும் மாணவியின் வாக்குமூலம் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்து அமைப்பினர் போராட்டம் ::
மாணவியின் தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம்தான் காரணம் எனக்கூறி, அகில பாரத வித்தியார்த்தி பரிசத் (ABVP) என்ற இந்து அமைப்பினர் முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்ட முயன்றனர். அப்போது காவல் துறை வாகனங்களை சேதப்படுத்தியதாவும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
நீதி கேட்டு போராட்டம் ; ஊக்குவிக்க முடியாது ::
ஏபிவிபி அமைப்பு சார்ந்த கவுசிக், உகேந்திரன், சுசீலா, அமர் வஞ்சிதா உள்ளிட்ட 31 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் "மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டே போராட்டத்தில் ஈடுபட்டோம். முதல்வரின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமே எங்களது நோக்கமாக இருந்தது. இந்தப் போராட்டத்தின்போது ஆயுதங்கள் ஏதும் வைத்திருக்கவில்லை" என கூறப்பட்டிருந்தது.
இம்மனுவானது நீதியரசர் என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுபோன்ற போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
English Summary
Thanjavur Michalpatti school girl death protest case