காவல்துறையை கையில் வைத்திருக்கும் திராவிட மாடல் அரசு; கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி..!
The case filed against AIADMK members should be withdrawn Edappadi Palaniswami
காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டப்படி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தமிழக காவல் துறைக்கு முழு சுதந்திரத்தை இன்றுவரை வழங்கவில்லை என திமுக திமுக அரசை எதிர்த்து கடுமையாக விமரிசித்து இருந்தார்.
தற்போது விளம்பர மாடல் ஸ்டாலின் அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு பதிந்திருப்பதற்கு எனது கடும் கண்டனம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில் #யார்_அந்த_சார் என்ற கேள்வியுடன்,#SaveOurDaughters என்ற விழிப்புணர்வு வாசகத்துடன், சென்னையில் பிரபல வணிக வளாகம் ஒன்றில் மக்களிடையே மிகவும் அமைதியாக, ஒழுக்கத்துடன் கவன ஈர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்ட அ.தி.மு.க.வை சேர்ந்த இளைஞர்களை ஆளும் அரசு கைது செய்ததை தொடர்ந்தே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இளைஞர்களை கண்டு பதற்றம் அடைந்த விளம்பர மாடல் ஸ்டாலின் அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு பதிந்திருப்பதற்கு எனது கடும் கண்டனம்.தேசிய ஊடகம் வரை கவனத்தை ஈர்த்து, பொதுமக்களின் பேராதரவை அதிமுக வின் போராட்டங்கள் பெறுவதும், இந்த திமுக அரசின் பொய்முகங்கள் தோலுரிவதும்,பொய் விளம்பர மாடல் ஸ்டாலினின் அரசுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த வழக்கு குறித்த ஒரு முக்கியமான கேள்வியையும்,பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், பொதுமக்கள் கூடும் இடத்தில், எவ்வித இடையூறும் இன்றி சமூக அக்கறை கொண்டு,அறவழியில் மேற்கொண்ட அதிமுக இளைஞர்களை வழக்குப் போட்டு, கைது செய்து அடக்கிவிடலாம் என்று விளம்பர மாடல் ஸ்டாலினின் திமுக அரசு எத்தனிப்பது, கண்டிக்கத்தக்கது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்ட இவ்வழக்கை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.
English Summary
The case filed against AIADMK members should be withdrawn Edappadi Palaniswami