சர்ச்சை!!! தமிழை மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையோடு நோக்குகிறது!!! - தங்கம் தென்னரசு
The central government is looking at Tamil with a stepmotherly attitude Thangam Tennarasu
நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றதில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது,"அறமே ஆட்சியின் அடித்தளமாக கொண்ட திராவிட மாடல் அரசு எல்லோர்க்கும் எல்லாம் என்ற கொள்கையில் செயல்படுகிறது.
கடந்த 3 ஆண்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒரே ஆண்டில் உத்தரபிரதேசத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்கள் அதிகம் இடம்பெறும்.தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களுக்கானதாக உள்ளது.

தமிழ்நாடு அரசு பழங்குடி மக்கள் பேசும் மொழிக்கும் உரிய கவனம் கொடுப்பதாகவுள்ளது. மத்திய அரசு நமது உயிரினும் மேலான தமிழ் மொழியை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நோக்குகிறது.நாட்டிலேயே அதிகளவில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
4 ஆண்டுகளில் 10, 649 புதுத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாடு முன்னணி மாநிலமாகவுள்ளது.தி.மு.க. ஆட்சியில் 32 சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.4 ஆண்டுகளில் மட்டும் 42 அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளது.மத்திய அரசு நிதி வழங்காத நிலையிலும், சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு மாநில அரசே நிதி ஒதுக்கி பணி மேற்கொண்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று வலியுறுத்திய பிறகுதான் மத்திய அரசு நிதி வழங்கியது.கடந்த 3 ஆண்டுகளில் ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ. 19,608 கோடிதான் ஒதுக்கீடு செய்துள்ளது.உலகில் உள்ள பல நாடுகள் செமிகண்டர் துறையில் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகிறது
.செமி கண்டக்டர் துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக அமைய வேண்டும் என்பதற்காக கோவை மண்டலம் மேலும் செழுமை அடையும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.இது தற்போது அரசியல்வாதிகளிடையே பேசுபொருளாகி உள்ளது.
English Summary
The central government is looking at Tamil with a stepmotherly attitude Thangam Tennarasu